Aran Sei

உழவன் மகன் என எடப்பாடி பழனிசாமி நடிப்பதை விவசாயிகள் நம்பமாட்டார்கள் – வைகோ

யர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், தேர்தலுக்காக, நான் உழவன் மகன் எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிப்பதை விவசாயிகள் நம்ப மாட்டார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உயர்மின் கோபுர திட்டங்களால் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும், வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், விவசாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், உயர்மின் கோபுரத்திற்குப் பதிலாகச் சாலை ஓரமாகக் கேபிள் அமைத்து, மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகள், அறவழியில் போராடி வருகின்றார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

’கற்களை வீசுவதால், விவசாயிகளின் தைரியத்தை உடைத்துவிட முடியுமா?’ – ராகுல் காந்தி கேள்வி

சென்னை போன்ற மாநகரங்கள், மதுரையிலிருந்து இலங்கை, கொச்சி மற்றும் குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டிக்கு, கேபிள் அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மத்திய, மாநில அரசுகள், கிராமங்களில் மட்டும் விளைநிலங்களுக்கு நடுவே உயர்மின் கோபுரங்களை அமைத்து, நிலங்களைக் கையகப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்றன என்றும் நிலத்தைக் கையகப்படுத்தியதற்காக, விவசாயிகளுக்குரிய இழப்பீடும் தரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாத வாடகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை என்று வைகோ கூறியுள்ளார்.

அரசுகள் மேற்கொள்கின்ற அனைத்து வகை திட்டங்களாலும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, 100 சதவீத கருணைத் தொகை வழங்கப்படுகின்றது. ஆனால், உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மட்டும் வழங்குவதில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், பாதிக்கப்பட்ட கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், வீடுகளுக்கும் இழப்பீடு தரவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் உரை: ‘மோடி அரசின் தோல்விகளை மறைக்கும் பிரச்சார உரை’ – திருமாவளவன் விமர்சனம்

 

தற்போது தமிழக அரசு விருதுநகரிலிருந்து திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வரை, 765 கிலோவாட் உயர் மின் கோபுரம் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது என்றும், திட்டப்பணிகள் 10 சதவீதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில் மின்சார நிலையங்கள் ஆயத்தம் ஆகவில்லை என்றும் துணைமின் நிலையப் பணிகள் தொடங்கப்படவே இல்லை என்றும் வைகோ கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 4ஆம் தேதி, பள்ளிபாளையத்தில் உள்ள பயணியர் விடுதியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியைச் சந்தித்து திட்டப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு, உடனடியாக நிறுத்துகிறேன் என்று அறிவித்த அமைச்சர். ஆனாலும் தொடர்ந்து திட்டப் பணிகள் நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்நாடகாவில் மதக்கலவரம் தொடர்பான 21 வழக்குகள் வாபஸ் – எம்பி, எம்எல்ஏக்கள் பரிந்துரையில் நடவடிக்கை

”கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை; ஆனால், தேர்தலுக்காக, நான் உழவன் மகன் என எடப்பாடி பழனிசாமி நடிப்பதை விவசாயிகள் நம்ப மாட்டார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர்மின் கோபுரங்கள் பிரச்சினையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்