Aran Sei

பாஜகவின் யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சி: விவசாய சட்டங்களை ரத்து செய்ய கோரி கருப்புகொடி ஏந்திய விவசாயிகள்

பாஜக தலைவர் பபிதா போகாட் கலந்துகொண்ட சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், ஒன்றிய அரசு அமல்படுத்திய மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக கறுப்புக் கொடிகளை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (ஜூன் 21), ஹரியானா மாநிலம் சர்கி டாட்ரி மாவட்டத்தில் உள்ள ஜந்தா கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பபிதா போகாட் பங்கேற்றுள்ளார்.

மைதானத்திற்கு வெளியே கூடிய விவசாயிகள், ஹரியானாவில் ஆளும் பாஜக – ஜனநாயக ஜனதா கட்சி(ஜேஜேபி) அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். மேலும் விவசாயிகள் விரோத விவசாய சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளனர்.

‘விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

“விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவார்கள். பாஜக-ஜேஜேபி தலைவர்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வார்கள்.” என்று விவசாயிகள் சங்க தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும், ஹரியானா மாநிலத்தில் பாஜக-ஜேஜேபி தலைவர்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் விவசாய சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source; pti

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்