Aran Sei

பஞ்சாப், ஹரியானாவில் நெல் கொள்முதலுக்கான ஒன்றிய அரசின் உத்தரவு – ‘விவசாயிகளின் வெற்றி’ என காங்கிரஸ் கட்சி பாராட்டு

ஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அக்டோபர் 11 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 3 ஆம் தேதி நெல் கொள்முதல் தொடங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டிருப்பது, ‘விவசாயிகளின் வெற்றி’ என காங்கிரஸ் கட்சி பாராட்டியுள்ளது.

கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நெல் கொள்முதல் அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கும் என ஒன்றிய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இரண்டு மாநில விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளாவில் கிருஷ்ணர் படங்களை வரையும் இஸ்லாமியப் பெண் – கோயிலுக்குள் அழைத்து மரியாதை செய்த இந்துக்கள்

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, “அக்டோபர் 11 ஆம் தேதிவரை நெல் கொள்முதல் செய்வதை ஒத்திவைத்திருந்த பிடிவாதமான முடிவை மோடி அரசு திரும்ப பெற்றுள்ளது” என பதிவிட்டுள்ளார். மூன்று வேளாண் சட்டங்களையும் அரசு திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்

ஹிந்தியில் பதிவிட்டிருக்கும் மற்றொரு பதிவில், “எங்களின் (காங்கிரஸ் கோரிக்கைகள் : பருவம் தவறி பெய்த மழை மற்றும் கொள்முதலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மண்டிகளில் தேங்கி கிடைக்கும் பயிர்களை 2021-22 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் வழிகாட்டுதலின்படி கொள்முதல் செய்து பணம் வழங்க வேண்டும். பயிர்களின் ஈரப்பத அளவை 25 விழுக்காடு வரை தளர்த்த வேண்டும். பயிர் இழப்பீடு தொகையை 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நெல் கொள்முதல் விரைவில் தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியும், ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் உடனான சந்திப்பின்போது ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டரும் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : The New Indian Express

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்