விவசாய சட்டங்களுக்கு எதிராக, செப்டம்பர் 5 ஆம் தேதி முசாபர் நகரில் நடைபெற இருக்கும் மகா பஞ்சாயத்து வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் மற்றும் அதில் நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள விவசாயிகள் பங்கேற்பார்கள் என பாரதிய கிசான் சங்கம் (பிகேயூ) தெரிவித்துள்ளது.
”பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களை தவிர்த்து, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த விவசாயிகள் காசிப்பூர் எல்லையை வந்தடைந்துள்ளனர்.” என பிகேயூவின் ஊடக பொறுப்பாளர் தர்மேந்திர மாலிக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து, தற்போது தான் முதல் முறையாக சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ள பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செய்தித் தொடபாளர் ராகேஷ் திகாயத், விவசாயிகள் மற்றும் பணியாளர்கள் மகாபஞ்சாயத்தை தங்கள் கவுரவத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள். பில் வாபஸ் நஹின் தோ, கர் வாபஸ் நஹின் (சட்டம் திரும்ப்பெறப்படாமல், வீடுகளுக்குத் திரும்புவதில்லை) நான் ஏற்கனவே கூறியதை நினைவு படுத்த விரும்புகிறேன்.” என கூறியுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.யூ) என்னை முசாபர்நகருக்கு திரும்பும்படி அழைப்பு விடுத்துள்ளது, இருப்பினும் நான் என் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக திகாயத் சகோதரர்கள் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள்
பிரபல வேளாண் விஞ்ஞானியும், கர்நாடகா ராஜ்ய ராய்தா சங்ஹாவின் தலைவருமான எம்.டி. நஞ்சுடாஸ்வாமியின் மகள் சுக்கி நஞ்சுடாஸ்வாமி, முசாபர்நகர் செல்லும் முன் ராகேஷ் திகாயத்தை சந்தித்து பேசியுள்ளார்.
மகாபஞ்சாயத்து நடைபெறும் அரசு கல்லூரி மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகாமான விவசாயிகள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்ய காவல்துறையுடன் இணைந்து 5 ஆயிரம் தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளனர் என தர்மேந்திர மாலிக் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம், நூற்றுக்கணக்கான மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகளுக்கு உணவளிக்க நடமாடும் சமையல் கூடங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. மகாபஞ்சாயத்திற்கு வரும் விவசாயிகளை விருந்தினர்களாக கருதி, அவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு உள்ளுர் மக்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு விட்டதாக, அரசாங்கம் அவதூறுகளை பரப்பி வருகிறது, ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் வேலை செய்யாது என தர்மேந்திர மாலிக் தெரிவித்துள்ளார்.
மூத்த அதிகாரிகளை விவைத்து முசாபர்நகரில் நிலைமையைச் சமாளிக்க உத்திரபிரதேச அரசு ஆயத்தமாகி வருகிறது. உள்ளூர் காவலர்களுக்கு உதவும் வகையில் கடந்த காலங்களில் முசாபர் நகரில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.