Aran Sei

ரயில்வே தண்டவாளத்தில் 169 நாட்களாக நடைபெற்ற தர்ணா – அறுவடையால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

த்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி அமிர்தசரஸின் ஜண்டியாலா ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் 169 நாட்களாக தர்ணா போராட்டத்தில் விவசாயிள் ஈடுபட்டு வந்தனர். தற்போது, போராட்டம்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி (கேஎம்எஸ்சி) வியாழக்கிழமை, மார்ச் 11 ஆம் தேதி அறிவித்திருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வரவிருக்கும் கோதுமை அறுவடைக்காலத்தை கருத்தில் கொண்டும், டெல்லி எல்லைகளில் நடைபெற்று வரும் போராட்டத்தை வலுபடுத்தவும், தர்ணா போராட்டம்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கேஎம்எஸ்சி தெரிவித்துள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ் மற்றும் பீஸ் இடையே பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களைத் தடுத்து நிறுத்தி, தர்ணாவில் கேஎஸ்எம்சி சங்கத்தினர் ஈடுபட்டிருந்தனர். இதனால் அமிர்தசரஸிலிருந்து 60 சதவீத ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேளாண் சட்டங்களை கைவிடாவிட்டால் எத்தனை ஆண்டுகளானாலும் போராட்டம் தொடரும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

“நாங்கள் இப்போது தர்ணாவை நிறுத்தி வைத்துள்ளோம். அறுவடை பருவம் வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் தர்ணாவில் அதிகமான பலத்தை நாங்கள் கூட்டுவோம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு சாதகமாக பதில் அளிக்காவிட்டால் தர்ணாவில் மீண்டும் ஈடுபடுவோம்” என கேஎம்எஸ்சி பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தர் கூறியுள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

அமிர்தசரஸ்-டெல்லி ரயில் தடவாளத்தை  அமிர்தசரஸில் உள்ள ஜண்டியாலா குரு அருகே மறித்தது மட்டுமன்றி, பயணிகள் ரயில்களுக்கான வழியை அனுமதியளிக்க மறுத்து  வந்த ஒரே அமைப்பு கேஎம்எஸ்சியாகும்.

கடந்த வருடம் நவம்பர் கடைசி வாரத்தில் பஞ்சாபில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் ரயில் தண்டவாளத்தில் ஒரு நாள் தர்ணாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் – அதிவிரைவு நெடுஞ்சாலையை முடக்கும் விவசாயிகள்

ரயில்வே நிர்வாகம் தர்ணாகாரணமாக சில ரயில்களை மாற்று வழியில் டார்ன் தரன் வழியாக இயக்கிக் கொண்டிருந்தது. இந்தப் போராட்டத்தால் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் இருந்து முழுமையான ரயில்களை இயக்க முடியவில்லை.

அமிர்தசரஸ் ரயில் நிலையத்திலிருந்து 60 சதவீத ரயில்சேவைகள் தர்ணாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், கோடையை கருத்தில் கொண்டு, தில்லி எல்லைகளில் குளிர்ந்த நீர் மற்றும் காற்றாடி வசதிகளை கேஎம்எஸ்சி  ஏற்பாடு செய்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“போராட்டம் தொடர்கிறது, தீவிரமடையும் ” – விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

விபத்துகளைத் தவிர்க்க ஒவ்வொரு நிழற்குடையிலும் தீயணைக்கும் கருவிகளை வைக்க வேண்டும் என்று அந்த அமைப்பு விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாக, தி இந்திய எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

“கோடைவெப்பத்தைத் தவிர்க்கக் காற்றாடி வசதிகள் தங்குமிடங்கள் இருக்க வேண்டும். கொசுவைத் தடுக்க தள்ளுவண்டிகளில் வலைகள் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீர் மற்றும் தீயணைக்கும் கருவி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூய்மையை உறுதி செய்யச் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என சர்வான் சிங் பந்தார் கூறியதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்