இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறுவது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று பாரதீய கிஷன் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டக்களத்தை விட்டு வீட்டுக்குத் திரும்பமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் – பிரதமர் மோடிக்கு விவசாயிகள் சங்கம் கடிதம்
இதுகுறித்து தெரிவித்துள்ள அவர்,” இந்திய ஒன்றிய அரசு எப்போது பேச அழைக்கிறதோ, அப்போது சம்யுக்த கிஷன் மோர்ச்சா அமைப்பு பேசும். ஆறு மாதத்திற்கு மேல் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனாலும், இந்த அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது” என்று தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே நடந்த எண்ணற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன.மேலும், கடந்த ஜனவரி 22 அன்று அரசின் குழு விவசாயிகளைச் சந்தித்தது, பின்னர் ஜனவரி 26 அன்று நடத்த டிராக்டர் பேரணிக்கு, பிறகு விவசாயிகளுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இந்நிலையில், வரும் மே 26 விவசாயிகள் போராட்டம் 6 மாதத்தை எட்டும் நிலையில் விவசாயிகள் நாடுதழுவிய போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்துள்ளதாகவும், காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட 12 கட்சிகள் இந்த போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.