Aran Sei

போராட்ட களத்தில் பூங்கா அமைத்த விவசாயிகள்: சட்டங்களைத் திரும்ப பெறாமல் ஒரு அங்குலம் கூட நகர முடியாது – விவசாயிகள் திட்டவட்டம்

மூன்றாவது மாதத்தை நிறைவு செய்ய இருக்கும் விவசாயிகள் போரட்ட களங்களில் ஒன்றான காசிப்பூர் எல்லையில், வெள்ளை வண்ண பின்னணியின் மேல் சிகப்பு வண்ணத்தில்  வரையப்பட்ட அடையாள குறிகள், எல்லைகளின் இருபுறமும் வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒரே மாதிரியாகத் தோன்றும் இரண்டு வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருப்பதாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்று, காவல் துறையினர் தாங்கள் அமைத்துள்ள தடுப்புகளின் மீது எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர். இரண்டு, விவசாயிகள் “தாங்கள் அமைதியை விரும்புவதாக” அவர்கள் போராட்ட களத்தில் அமைத்திருக்கும் சிறிய பூங்காவில் ஒரு பதாகையை வைத்துள்ளனர் என்றும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சூரப்பா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது: கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நாட்டின் அனைத்து விவசாய நிலங்களிலும் விவசாயம் செய்ய முடியும் என்பதன் அடையாளமாக, பச்சை நிற வேலிகளால் பாதுகாக்கப்பட்ட சிறய நிலப்பகுதியில், பல்வேறு கிராமங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணைச் சேர்த்து, உருளைக்கிழங்கு, கரும்பு மற்றும் பூக்கள் அச்சிறிய பூங்காவில் விதைக்கப்பட்டிருப்பதாக, அதில் குறிப்பிட்டுள்ளது.

போராட்டம் செய்வதற்கான உரிமை வரையறைக்கு உட்பட்டது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

”தலைநகர் நோக்கி நகரும் எங்களை எச்சரிக்கும் விதமாகக் காவல்துறையினர் தடுப்புகள் மற்றும் வேலிகள் அமைத்துள்ள இடத்தில் எச்சரிக்கை பதாகையை அவர்களின் அடையாளமாகப் பயன்படுத்துகின்றனர். கார்பரேட் நிறுவனங்களின் தீய பார்வையையும், அரசாங்கத்தின் தீய எண்ணங்களையும் தவிர்க்கும் ஒரு அடையாளமாகவே நாங்கள் எங்கள் பதாகையைப் பயன்படுத்துகிறோம்” என மீரட்டை சேர்ந்த விவசாயி மேகராஜ் மாலிக் குறிப்பிட்டதாக தி இந்து தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேசம் காஸ்னாவை சேர்ந்த ஓம் பிரகாஷ் அவானா, ”விவசாயிகள் இயல்பிலேயே  அமைதியானவர்கள். எங்களை நோக்கித் தூப்பாக்கியை காட்டுவதன் மூலம் அரசாங்கம் அதனால் முடிந்ததை சிறப்பாகச் செய்கிறது, மண்ணைக் குவிப்பதன் மூலம் எங்களுக்குத் தெரிந்த ஒரே வழியில்  நாங்கள் பதிலளிப்போம். வளரும் பயிர்களின் ஒவ்வொரு அங்குலத்தின் மூலமும் எங்களது பதிலை உரக்க கூறுவோம்”  எனக் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கட்ட மக்களிடம் பணம் மோசடி – கைது செய்து காவல்துறை நடவடிக்கை

விவசாயிகள் ஓய்வெடுக்குமிடத்தை உருவாக்க, இரண்டு மூங்கிலைக் கொண்டு வந்த தாஸ்னாவை சேர்ந்த ஈஷ்வர்சந்த் பிதுரி, “விவசாயிகள் வெயிலுக்கு பழக்கப்படவில்லை என்பதில்லை. நாங்கள் வயல்வெளிகளில் அனைத்து வானிலையையும் பார்த்தவர்கள். வயதானவர்கள் எங்கிருந்தாலும், அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”கோடை காலம் இன்னும் ஆரம்பிக்காத நிலையில், வெயில் அதிகரித்து வருகிறது; என்ன நடந்தாலும், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறாத வரை இங்கிருந்து ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்” எனப் பிதுரி தெரிவித்ததாக, தி இந்து கூறியுள்ளது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்