விவசாயிகளின் போராட்டம் ஏழு மாதங்கள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணியை மேற்கொண்டு, மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஆளுநர்களுக்கு கோரிக்கை மனுக்களை அளிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
பாரதிய கிசான் யூனியனின் இளைஞர் பிரிவு தலைவர் கௌரவ் திகாயத் ஏஎன்ஐ-யிடம் பேசுகையில், “நாடு முழுவதும் ஆளுநர்களுக்கு புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாங்கள் இன்று (ஜூன் 26) மனுக்களை அளிக்கவுள்ளோம். விவசாயிகள் போராட்டம் அமைதியாக தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது போராட்டம் ஏழு மாதத்தை நிறைவு செய்ததைக் குறிக்கும் வகையில் ‘விவசாயத்தை காப்பாற்றுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்று முழங்கவுள்ளனர்.
இதுதொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒறுங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் வேதனையையும் கோபத்தையும் காட்டும் வகையில், ஜூன் 26 ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பவுள்ளோம். விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவரிடம் முறையிடுவோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source; ani
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.