ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தின் உச்சனா நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் மகாபஞ்சாயத்தில், விரைவில் அம்மாநிலத்தின் நடக்கவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக-ஜனநாயக ஜனதா தள வேட்பாளர்களுக்கு எதிராக விவசாயிகள் தீர்மானம் இயற்றியுள்ளனர்.
பாரதிய கிசான் யூனியனின் மாவட்டத் தலைவர் ஆசாத் பால்வா தாக்கல் செய்த இந்த தீர்மானத்திற்கு, விவசாயிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மேலும், விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிர் இழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாய போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மீட்பதாகக் கூறி, மார்ச் மாதம் சட்டபேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னர், மேற்கு வங்க சட்டபேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக பரப்புரை செய்ய அக்கிராமத்தை சேர்ந்த மூத்த விவசாயி தலைவர்கள் சென்றிருந்தனர். அடுத்த ஆண்டு, உத்தரபிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டபேரவைத் தேர்தலிலும் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
source; indianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.