Aran Sei

‘அக்.2 விவசாய தியாகிகளின் தினம்’ – விவசாய சங்கங்கள் அறிவிப்பு

க்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று(அக்டோபர் 12) ‘விவசாய தியாகிகளின் தினம்’ அனுசரிக்கப்படுவதாக மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள ஏனைய விவசாயிகளின் சங்கங்கள், வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, ‘இவ்வன்முறையில் தொடர்புள்ள ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராமீது எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத பிரதமர் மோடிக்கு கண்டனம்’ என்று தெரிவித்துள்ளது.

லக்கிம்பூர் வன்முறை – ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் காவல்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவு

பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தேசிய செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத், லக்கிம்பூர் கேரியில், இன்று(அக்டோபர் 12) மாலை, வன்முரையில் உயிரிழந்தவர்களுக்கு ‘ஆன்டிம் அர்தாஸ்’ (இறுதி அஞ்சலி) விழாவில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்