Aran Sei

சரியான முடிவெடுக்க வில்லையெனில் நாங்கள் எடுப்போம்- அரசை எச்சரிக்கும் விவசாயிகள்

Image Credits: Business Standard

னவரி 4-ம் தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தையின் போது மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு உறுதியான முடிவை எடுக்காவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய சம்யுக்த் கிசான் மோர்ச்சா (விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு) தலைவர்கள், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஹரியானாவில் மால்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை மூடுவதாகவும், குண்ட்லி-மானேசர் நெடுஞ்சாலையில் டிராக்டர் அணிவகுப்பு நடத்தவுள்ளதாகவும், ஜெய்ப்பூரிலிருந்து நெடுஞ்சாலையில் டெல்லி நோக்கி அணிவகுத்துச் செல்லவுள்ளதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.

பேச்சு வார்த்தை முடிந்தபின்பே கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசு

டெல்லியின் எல்லையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து 37 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது வரை மத்திய அரசுக்கும் போராடும் விவசாயிகளுக்கும் இடையே 6 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்ற 6-ம் சுற்று பேச்சுவார்த்தையில் விவசாய கழிவுகளை எரிப்பது மற்றும் மின்சார மானியம் தொடர்பான இரண்டு கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் போன்ற முக்கியமான கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

விவசாயிகள் போராட்டத்தை அரசு மிகவும் இலகுவாக எடுத்துக்கொள்வதாகத் தோன்றுகிறது. ஷாஹீன் பாக்ஸில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய போராட்டக்காரர்களை அவர்களால் கலைக்க முடிந்தது. எனவே எங்களையும் களைத்து விடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது என்றும் ஜனவரி 4-ம் தேதி அரசு ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால், விவசாயிகள் ஆகிய நாங்கள் ஒரு முடிவை எடுப்போம் என்றும் பாரதிய கிசான் யூனியனின் பொதுச் செயலாளர் யுத்வீர் சிங்   தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்