கடந்த ஆண்டு விவசாய மசோதா சட்டமாக்கப்பட்ட நாளான ஜூன் 5 ஆம் தேதியன்று, பாஜகவின் சட்டபேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் விவசாய சட்டங்களின் நகல்களை எரிக்கவுள்ளதாக போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 5, 1974 அன்று, ஜெயபிரகாஷ் நாராயண் ‘சம்பூர்ணா கிரந்தி’ (முழு புரட்சி) என்று அறிவித்து, அப்போதைய ஒன்றிய அரசுக்கு எதிராக ஒரு வெகுஜன இயக்கத்தை முன்னெடுத்தார். கடந்த ஆண்டு ஜூன் 5 அன்று, இந்த விவசாயிகள் விரோத விவசாய மசோதாக்களை ஒன்றிய அரசு சட்டமாக்கியது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதைக் குறிக்கும் நோக்கில், ஜூன் 5 ஆம் தேதி, நாடு முழுவதும் ‘சம்பூர்ணா கிரந்தி திவாஸ்’ (முழு புரட்சி நாள்) அனுசரிக்கப்பட வேண்டும். மூன்று விவசாய சட்டங்களின் நகல்களை பாஜகவின் சட்டபேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள் அலுவலகங்களுக்கு முன்னால் எரிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இது ஒரு வெகுஜன போராட்டமாக்கி, விவசாய சட்டங்களை ரத்து செய்யுமாறு ஒன்றிய அரசை கட்டாயப்படுத்துங்கள்.” என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.
Source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.