டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
கடந்த டிசம்பர் 31-ம் தேதி அரசுடன் நடத்தப்பட்ட 6-ம் கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முன்மொழிந்த நான்கு கோரிக்கைகளில் இரண்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஆனாலும், இரண்டு முக்கிய கோரிக்கைகளான மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு சட்ட உத்தரவாதம் வழங்குதல் ஆகியற்றிற்கு தீர்வு எட்டப்படாமல் இருந்தது.
“பேச்சுவார்த்தையை அமித்ஷா திசை திருப்பினார்” – போராடும் விவசாயிகள் குற்றச்சாட்டு
இந்நிலையில் இந்த இரண்டு கோரிக்கை குறித்தும் இன்று விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது என தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் – ” பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு உண்மைகளை திரிக்கிறது”
ஜனவரி 26-க்குள் மூன்று விவசாயச் சட்டங்களும் திரும்ப பெறப்படவில்லை எனில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்கு இந்தியா முழுமையிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வருகை புரிவார்கள் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உலக முக்கியத்துவம் வாய்ந்த குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துக் கொள்ள இருக்கிறார்.
சில சங்கங்களிடம் மட்டும் பேச்சுவார்த்தை – விவசாயிகள் ஒற்றுமையை குலைக்க திட்டம்
டெல்லியில் நிலவு கடும் குளிரால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். போராட்டத்தில் கலந்துக் கொண்டு மரணமடைந்தவர் எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
`சட்ட நீக்கம் வேண்டும் : சட்ட திருத்தம் அல்ல’ – பேச்சுவார்த்தை முடிவில் விவசாயிகள்
ஜனவரி 8-ம் தேதி, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை முற்றுகையிட்டு, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், இன்றுடன் 40-வது நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.