Aran Sei

விவசாயிகள் போராட்டம் : விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் கர்தார் சிங் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங் ஆகியோரின் தலைமையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இந்திய விளையாட்டு வீரர்கள் ஏராளமானோர் இந்திய அரசிடமிருந்து பெற்ற விருதுகளைத் திருப்பித் தர முடிவு செய்துள்ளனர்.

இந்திய விளையாட்டு வீரர்கள் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய அரிய சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இருப்பினும், விவசாயிகளுக்கு ஆதரவைக் காண்பிப்பதற்காகத் தனது கேல் ரத்னா விருதை திருப்பித் தர தயாராக இருக்கும் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர், விவசாயிகளின் போராட்டங்களில் இருந்து மற்ற  வீரர்களை விலகி இருக்க வேண்டுமென்று ஹரியானா மற்றும் பஞ்சாபிலிருக்கும் பிற விளையாட்டு வீரர்களை அறிவுறுத்தியுள்ளார் என்று ஸ்க்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஸ்க்ரோலிற்குத் தொலைபேசி வாயிலாக அவர் கூறியுள்ளதாவது, விவசாயிகளுக்கு ஆதரவளிக்க விரும்பிய பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களிடமிருந்து எனக்கு நிறைய செய்திகள் வந்தன. ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு அரசாங்கத்தில் வேலைகள் உள்ளன.

ஆனால், இந்த அரசாங்கத்தின் குறுகிய மனப்பான்மையை நன்கு அறிந்த நான், விளையாட்டு வீரர்களை போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அரசின் இந்த மனப்பான்மை விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன். தனிப்பட்ட முறையில், நான் விவசாயிகளுடன் உறுதியாக நிற்பேன், ”என்று 2019 ஆம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் டெல்லி மக்களவைத் தொகுதிக்குப் போட்டியிட்ட இந்திய குத்துச்சண்டை வீரர் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடியான நேரத்தில், விளையாட்டு வீரர்கள் தங்கள் தேசிய விருதுகளைத் திருப்பித் தர முடிவு செய்தது ஏனெனில் விவசாயிகளின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நம்புவதால்தான்.

இந்த விருதுகளைப் பெறுவதற்குக் காரணமே விவசாயிகள்தான். அவர்கள் எங்களுக்கு உணவளிக்க வில்லையென்றால், எங்களால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது ”என்று இரண்டு முறை ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற கர்தார் சிங் ஸ்க்ரோல்லிடம் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்கள் தங்களது விருதைகளைத் திருப்பித் தருவதற்காகக் கடந்த  திங்களன்று இந்திய பிரஸ் கிளப்பில் இருந்து ராஷ்டிரபதி பவனை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். ஆனால் அவர்களை வழி மறித்துக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர், கர்தார் சிங் தலைமையிலான குழு புதுதில்லியில் தங்கி செவ்வாயன்று ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம், விளையாட்டு வீரர்களின் நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒரு கணம், விருதுகளைத் திருப்பித் தருவதன் மூலம் நான் என்ன சாதிக்கப்போகிறேன் என்று நினைக்கிறேன் என்று 2012 ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் கூறியுள்ளார்.

விருதுகளைத் திருப்பி அளிப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. அரசாங்கத்திடம் எங்கள் அதிருப்தியைக் காண்பிக்கவே நாங்கள் இம்முடிவை எடுத்துள்ளோம். இந்நாட்டின் விளையாட்டு வீரர்கள் விவசாயிகளோடு துணை நிற்பதில் உறுதியாக இருக்கிறோம். வேளாண் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற்றால்தான் விவசாயிகள் மகிழ்வார்கள். விவசாயிகளின் மகிழ்ச்சியே எங்களின் மகிழ்ச்சி என்று விஜேந்திரர் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவரிடம் விருது பெறுவது ஒருபுறமிருந்தாலும் வெற்றி பெற்ற வீரருக்குப் பரிசுத் தொகை, ஓய்வூதியம் மற்றும் ரயில்வேயில் சுதந்திரமாகப் பயணிப்பதற்கான வாய்ப்புகளே ஒருவருக்கு அதிகப்பனளிக்கக் கூடியதாகும்.

பெரும்பாலான வீரர்கள் மிகவும் பின்தங்கிய பொருளாதாரப் பின்னணியில் இருந்தே வந்தவர்கள். விருதைத் திருப்பி அளிப்பதென்பது தங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சலுகையைத் திருப்பி வழங்குவதற்குச் சமம்

விருதுகளையும் பதக்கங்களையும் மீண்டும் வெல்ல முடியும், எனக்கு 14 ஆண்டுகளாக பஞ்சாப் விவசாயிகள் உணவளித்துள்ளனர் அவர்களுக்கு உதவி தேவைப்படும் போது நான் அவர்களுடன் துணை நிற்பதே நியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு அரசியல் புரியவில்லை என்றும் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறாரால் என்றும் சொல்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் விருதுகளைத் திருப்பியளிப்பதென்பது எங்களுக்கு உணவிட்டு விவசாயிகளுக்கு ஆதரவைக் காண்பிப்பதாகும் என்று கர்தார் சிங் கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் நுழைவாயிலில் பல நாட்களாக முகாமிட்டுப் போராடிவருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கி இருக்கும் விளையாட்டு வீரர்களைச் சந்திக்கக் குடியரசுத் தலைவர் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. விவசாயிகளின் பிரச்சனைக்குத் தீர்வு எட்டாமல் டெல்லியை விட்டுப் போவதில்லை என்று வீரர்கள் முடிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்