Aran Sei

விவசாயிகள் போராட்டம் : ’பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளித்த கவிஞர்

டெல்லியில் நடக்கும் விவசாயகளின் போராட்டங்களுகளை ஆதரித்து பத்மஸ்ரீ விருது பெற்ற பஞ்சாபி கவிஞர் சுர்ஜித் பர்டெர் தன்னுடைய விருதை மத்திய அரசுக்கு திரும்ப அளித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்தச் சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர். எனவே, இச்சட்டங்களை எதிர்த்து அவர்கள் டெல்லியில் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாய சங்கங்கள், நாளை (8 ஆம் தேதி) நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்குப் பல  காட்சிகள் அமைப்புகள்  ஆதரவு அள்ளித்தந்துள்ளன. மத்திய அரசோடு விவசாய பிரதிநிதிகள் பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டு, பின்னர் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாத நிலையில் தங்களின் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குக் ஆதரவு அளிக்கும் வகையில் பஞ்சாபி கவிஞர் சுர்ஜித் பர்டெர் மத்திய அரசு வழங்கிய ’பத்மஸ்ரீ’ விருதை திரும்ப அளித்துள்ளார்.

கவிஞர் சுர்ஜித் பர்டெர் , பஞ்சாப் குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில், நாட்டார் வழக்காறுகள் குறித்த முனைவர் பட்ட ஆய்வை முடித்தவர். பின்னர்,  பஞ்சாப் விவசாய கல்லூரியின் பஞ்சாபி மொழி பேராசிரியராக இருந்திருக்கிறார். சினிமா, கவிதை, கட்டுரை என்று கலையின் பல வடிவங்களில் தன் கால் தடத்தை பதித்துள்ளார்.

பஞ்சாபின் மிக முக்கியமான கவிஞராக விளங்கும் கவிஞர் சுர்ஜித் பர்டெர், 1993 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருதும், 2012 ஆம் ஆண்டின் இந்தியவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பைடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்