Aran Sei

விவசாயிகள் போராட்டம் : ஆதரவளிக்கும் விளையாட்டு வீரர்கள்

விவசாயகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் குத்துச்சண்டை வீரர்  விஜேந்தர் சிங், மத்திய அரசு அளித்த கேல் ரத்னா விருதைத் திருப்பி அளிக்க தயார் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஹரியானா மாநில விளையாட்டு வீர்ர்கள் பலர், விவசாய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரபல பஞ்சாபி கவிஞர் சுர்ஜித் பதார், தனது பத்மஸ்ரீ விருதைத்  திருப்பித் தருவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் ஆண்டு,  பீஜிங் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த வீர்ர் விஜேந்தர் சிங், மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பித் தருவதாகவும், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் அறிவித்த மறுநாள் (டிசம்பர் 7), மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் நேற்று (டிசம்பர் 8) ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் : ’பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளித்த கவிஞர்

 

விவசாயிகளின் போராட்டத்திற்கு விரைந்து தீர்வுக் காணக்கோரி, தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வீடியோக்களையும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர்.
ரியோ 2016 ஹாக்கி அணியில் விளையாடிய ஹாக்கி வீரர் பூனம் ராணி, ட்விட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில், அனைத்து விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்குமாறு மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ள அவர், தான் ஒரு விவசாயியின் மகள் என்றும் அவர்களின் வலியை புரிந்து கொள்வதாகவும் ஹாக்கி வீரர் பூனம் ராணி கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் : அரசு விருதை திருப்பித்தரும் ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங்

 

ஹரியானாவின் ஜஜ்ஜரைச் சேர்ந்த மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, “நான் விவசாயிகளுடன் இருக்கிறேன்’ என்று எழுதப்பட்ட படத்தை, தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மத்திய அரசின் பிடிவாதமான அணுகுமுறையால் விவசாயிகள் சாலைகளில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.
பஜ்ரங் புனியா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் உட்பட பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காகப் பதக்கங்களை வென்று தந்துள்ளார்.

 

பெண் மல்யுத்த வீரரான வினேஷ் போகாட் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, ட்வீட் செய்துள்ளார். அதில், ”விவசாயிகள் தங்களது உரிமைகளை கேட்டு சோர்வடைந்துவிட்டனர். இப்போது ஒரு தீர்வைக் காண விரும்புகிறார். அவர்கள் தங்களின் உரிமைகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள், இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீரர் வினேஷ் போகாட். அவரது உறவினர்களான கீதா போகாட் மற்றும் பபிதா போகாட் ஆகியோரும் சர்வதேச மல்யுத்த வீரர்கள் ஆவர். அவர்களும் காமன்வெல்த் விளையாட்டு பதக்கம் வென்றவர்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்