Aran Sei

 அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற  பேச்சுவார்த்தைத் தோல்வி – தொடரும் விவசாயிகள் போராட்டம்   

ரியானா மாநிலம் கர்னலில் விவசாயிகள்மீது தடியடி நடத்த அனுமதியளித்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே அமர்ந்து போராட்டத்தைத் தொடர இருப்பதாக, விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாத், “விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படும் வரை, போராட்டம் தொடரும் மற்றும் உத்திரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் இணைய உள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் போலவே, கர்னலில் நடைபெற்று போராட்டமும் அரசுக்கு எதிரான ஒரு எதிர்ப்பைக் காட்டும் செயல் தான்.” என கூறியுள்ளார்.

மேலும், “விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துடன் அமைதியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை விரும்புகின்றனர். இதன்மூலம் தலைமை செயலக கிளைக்கு வரும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாமல் இருப்பது தவிர்க்கப்படும்” என குறிபிட்டுள்ளார்.

ஹரியானா அரசின் ‘பிடிவாதமனப்பான்மை’ மற்றும் ’உணர்வின்மை’ போக்கில் சிறிதும் மாற்றமில்லை எனக் கூறிய ஜெய் கிசான் அந்தோலன் தலைவர் யோகேந்திர யாதவ், “அரசின் போக்கில் மாற்றம் ஏற்படாதவரை பேச்சுவார்த்தை தோல்வியடையும். விவசாயிகள்மீது தடியடி நடத்த உத்தரவிட்ட அதிகாரி ஆயுஷ் சின்னாவுக்கு எதிராக கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என விவசாயிகள் கோரி வருகின்றனர். ஆனால் அரசு அதை விரும்பவில்லை” என அவர் என கூறியுள்ளார்.

”விசாரணை நிலுவையில் இருக்கும் அதிகாரி இடைநீக்கம் செய்யப்படுவது வழக்கம், இந்த அதிகாரியை இடைநீக்கம் செய்ய கூட அரசு தயாராக இல்லை. இதன் மூலம் அவர் முதலமைச்சரின் உத்தரவின் பெயரிலேயே செயல்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹரியானாவின் அகில இந்திய கிசான் சபாவின் துணைத் தலைவர் இந்தர்ஜித், “சேவை விதிகள் மற்றும் குற்றவியல் சட்டத்தின்படி அதிகாரி ஆயுஷ் சின்ஹாவின் நடத்தை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ மற்றும் மன்னிக்க முடியாதது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக உள்ளன. இது எங்களுக்கு ஒரு முக்கியமான பிரச்னை” என கூறியுள்ளார்.

கர்னல் துணை ஆணையர் நிஷாந்த் குமார், “தடியடி நடத்திய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தீர்மானமாக இருக்கின்றனர். ஆனால், விசாரணையின்றி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நிர்வாகம் பொறுமை, கட்டுப்பாடு மற்றும் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதோடு, ஒரு சுமூகமான தீர்வை விரும்புகிறது. (கிளை) தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகங்கள் எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படும்” என தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்