Aran Sei

விவசாயிகள் போராட்டம் : பகுதி பகுதியாக நடைபெறும் உண்ணாவிரதம்

த்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தை இணைக்கும் டெல்லி எல்லைகளில் போராடிவரும் விவசயிகள் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் பல பகுதிகளாக இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவுள்ளனர். முதலில் 11 பேர் இதில் பங்கேற்பார்கள் என்று இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

உரிமைக்காகப் போராடும் விவசாயிகள் : வருமான வரித்துறை கொண்டு மிரட்டும் அரசு

டெல்லியின் பல்வேறு எல்லைகளில், கடந்த நான்கு வாரங்களாக வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடிவருகின்றனர். முக்கியமாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் றது செய்ய வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ், “புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் அணைத்து பகுதிகளிலும் விவசாயிகள் திங்களன்று ஒரு நாள் ரிலே (பல பகுதிகளாக நடைபெறும்) உண்ணாவிரதத்தை தொடங்குவார்கள். சிங்கு எல்லை உட்பட டெல்லியில் உள்ள அணைத்து போராட்ட தளங்களிலும் 11 உறுப்பினர்கள் கொண்ட குழு இதைத் தொடங்கிவைக்கும். நாடு முழுவதும் உள்ள அனைத்து போராட்ட தளங்களிலும் இதை பின்பற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அரசின் பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம் : விவசாயிகளுக்கு ஆதரவாகப் படித்த இளைஞர்கள்

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் காரணமாகப் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. எந்தெந்த சாலைகள் மூடப்பட்டுள்ளன, எவை திறந்துள்ளன என்பதை குறித்து டெல்லி போக்குவரத்து காவல்துறை மக்களுக்குத் தொடர்ச்சியாகத் தகவல் தெரிவித்து வருகிறது.

திக்ரி, தன்சா எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஜாதிகாரா எல்லை இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு மட்டுமே திறந்திருக்கும் என்று போக்குவரத்து காவல்துறை தனத்து ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்