Aran Sei

குதிரைப்படையுடன் ஊர்வலம் வந்த ஒன்றிய அமைச்சர் – விவசாய சட்டங்களை நீக்கக் கோரி கருப்பு கொடிகளை காட்டிய விவசாயிகள்

credits : the hindu

குதிரைப்படையுடன் ஊர்வலம் சென்ற இந்திய ஒன்றியத்தின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சோம் பிரகாஷுக்கு எதிராக விவசாயிகள் குழு கறுப்புக் கொடிகளைக் காட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

நேற்று (ஜூன் 24), பஞ்சாப் மாநிலம் சப்பேவால் நகரில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், சில விவசாயிகள் சோம் பிரகாஷின் வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அவர்களை காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

முன்னதாக, சோம் பிரகாஷ் வருவதற்கு முன் விவசாயிகள் சங்க தலைவர் குர்தீப் சிங் குன் குன் தலைமையில், கறுப்புக் கொடிகளை ஏந்திய விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, அவரின் உருவ பொம்பையையும் எரித்துள்ளனர்.

பாஜகவின் யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சி: விவசாய சட்டங்களை ரத்து செய்ய கோரி கருப்புகொடி ஏந்திய விவசாயிகள்

கடந்த ஆண்டு செப்டம்பரில் இயற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ‘சோம் பார்காஷ் திரும்பி செல்லுங்கள்’ போன்ற முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர்.

விவசாய சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு எதிராகவும் விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் பாஜக-ஜேஜேபி தலைவர்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் விவசாய சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source; newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்