Aran Sei

அறுவடைக்குப் பின் போராட்டக்களம் திரும்பிய விவசாயிகள் – கொரோனா பரப்புவதாக எழும் அவதூறுகளுக்கு விவசாய சங்கம் கண்டனம்

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் அறுவடைக்குப் பின் டெல்லி சிங்கு எல்லைப்பகுதியில் நடைபெறும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் போராட்டக்களத்திற்கு திரும்பியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ரோபர் பகுதியைச் சார்ந்த சுக்விந்தர் சிங், அறுவடைக்காக சரிபாதிக்கும் மேற்பட்டோர் ஊர் திரும்பியிருந்தாகவும், தற்போது அவர்கள் மீண்டும் போராட்டக்களம் நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

அறுவடை முடிந்து டெல்லிக்கு திரும்பும் பஞ்சாப் விவசாயிகள்: போராட்டம் வலுவடைவதாக விவசாயிகள் சங்கம் தகவல்

மேலும், கடந்த மே 10 அன்று 250 ட்ராக்டர்களில் மக்கள் வந்ததாகவும், இதே போன்று மே 12 அன்றும் ஒரு குழு வந்தடைந்தாகவும் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று, ஊரடங்கு குறித்து தெரிவித்த பெரோசாபாத் பகுதியைச் சார்ந்த குரம்ரித் மெஹமா, “டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் போராட்டத்திற்கு செல்ல நினைத்தாலும் போக இயலவில்லை” என்று கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

‘போராட்டக்களங்களில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது’ – வலுவிழக்கிறதென ஒன்றிய அரசு பொய் கூறுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு திரும்புவது குறித்து தெரிவித்துள்ள ஹரியானா மாநில முதலமைச்சர் எம்.எல்.கட்டார், “சில கிராமங்கள் கொரோனா தொற்று மையங்களாக மாறியுள்ள நிலையில் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள சம்யுக்த கிஷன் மோர்ச்சா அமைப்பினர், ” ஹரியானா அரசு போதிய மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்காததால் கொரோனா தொற்று அதிவேகம் எடுத்து வரும் நிலையில் விவசாயிகளினால் கொரோனா தொற்று பரவுவதாக அரசு குற்றம்சாட்டுகிறது” என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்