Aran Sei

’ஷாஹீன் பாக்கை ஒடுக்கியது போல் எங்களை ஒடுக்க முடியாது’ – வேகமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்

ரியானா மாநிலத்தின்,  காண்டேலா கிராமத்தில், பிப்ரவரி 3 ஆம் தேதி ”மகாபஞ்சாயத்து” கூட்டத்தைத் திரட்டியதன் மூலம், ஹரியானாவின் விவசாயிகள் புதிய உத்வேகத்துடன் போராட்டத்திற்கு களமிறங்கி இருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இளைஞர்கள் அமைதியாக இருந்தால் விவசாயிகள் வெற்றிப் பெறுவார்கள் எனப் பாரதிய கிசான் யூனியனின் செய்தி தொடர்பாளர், ராகேஷ் திகாத், அந்தக் கூட்டத்தில் தெரிவித்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகாத்தின் உணர்ச்சி வெடிப்பை அடுத்து கூடிய ”மகாபஞ்சாயத்து” கூட்டத்தில், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட உத்திரவாதம் வேண்டும், சுவாமிநாதன் கமிசன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும், குடியரசு தின வன்முறை தொடர்பாகக் கைதுச் செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு அங்கிருந்தவர்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்ததாகவும்  தி ஹிந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் புதிய மசூதி – ”அது எங்களுக்குச் சொந்தமான இடம்” – டெல்லி சகோதரிகள் வழக்கு

காண்டேலா காப் பஞ்சாயத்தின் உத்தரவின் பெயரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,            பாரதிய கிசான் யூனியனின்  ரமேஷ் திகாத், பல்பீர் சிங் ராஜேவால் பேசியதாகவும், கூட்டத்தில், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த காப் தலைவர்கள் ஆகியோர் வந்திருந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு மீண்டும் ஆதரவு தெரிவிப்பதற்காக, மாநிலம் முழுவதும், மாவட்ட அளவிலான கிராம பஞ்சாயத்துகள், காப் பஞ்சாய்த்துகள் ஆகியன கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

” கடன் வழங்குவதில் முறைகேடு செய்தார் ” – தனியார் வங்கி ஐசிஐசிஐயின் சந்தா கொச்சார் மீது குற்றப் பத்திரிகை

திரண்டிருந்த “மகாபஞ்சாயத்து” கூட்டத்தினர் மத்தியில் பேசிய சங்குவான் காப் தலைவரும், தாத்ரி சட்டமன்ற உறுப்பினருமான சோம்பீர் சங்குவான், டெல்லியைச் சுற்றியுள்ள பகுதியில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளில் பஞ்சாப் விவசாயிகளைவிட ஹரியானா விவசாயிகள் அதிக அளவிலிருப்பதாகவும், இது ஒரு மாபெரும் போராட்டமாக உருவெடுத்திருப்பதாகவும் கூறியதாக தி ஹிந்து தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பேசிய திகாத், விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக உறுதியாகப் போராடி வருவதாகவும், அவர்களது சுயமரியாதையில் சமரசம் இருக்காது என்றும், போராட்டத்திற்கு ஆதரவாகப் பஞ்சாபிற்கு பின்னால் ஹரியானாவும், உத்திரபிரதேசமும் உறுதியாக நிற்கின்றன என்றும் தெரிவித்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் எந்த மாற்றமும் இருக்காது. போரின் நடுவில் குதிரைகளை மாற்ற வேண்டாம்” எனத் திகாத் பேசியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சேலம் எட்டுவழிச்சாலை : ‘ ரத்து செய்ய சட்டசபை தீர்மானம் வேண்டும் ‘ – விவசாயிகள்

பொய்களைப் பரப்புவதில் நிபுணத்துவம் வாய்ந்த சதிகாரர்களுக்கு எதிராக விவசாயிகள் கிளம்புள்ளதாகப் பேசிய பாரதிய கிசான் யூனியன் பொது செயலாளர் யுத்வீர் சிங், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கும் 6 ஆயிரம் ரூபாயை வேண்டுமானால் அரசாங்கம் நிறுத்திக்கொள்ளட்டும், ஆனால் பயர்களுக்கு உரிய விலையை வழங்க வேண்டும் எனக் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசு தின நிகழ்வை வைத்துக் காசிப்பூரில் வகுப்புவாத கலவரத்தைத் தூண்ட அரசாங்கம் முயன்றதாகக் குற்றம்சாட்டிய,  யுத்வீர் சிங், “இது ஷாஹீன் பாக் அல்ல, விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகளை அவ்வாறு பெறுவது என்பது தெரியும்” என தெரிவித்தாக தி ஹிந்து கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்