Aran Sei

விவசாயிகள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் நியமித்தக் குழுவின் அறிக்கை – பொதுவில் வெளியிட குழு உறுப்பினர் கோரிக்கை

விவசாயிகள் போராட்டம்குறித்து உச்சநீதிமன்றம் நியமித்தக் குழுவின் அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென அக்குழுவின் உறுப்பினர் அனில் ஜே. கான்வட்  தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 1 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனில் ஜே. கான்வட் எழுதியுள்ளக் கடிதத்தில், ‘வேளாண்சட்டம் குறித்து  விவசாயிகளுக்கு எழுந்துள்ள அச்சங்கள்’  மற்றும் இந்தக் குழுவின் பரிந்துரைகள் விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வாக அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் , “இந்தக் குழுவில் விவசாயிகளின் பிரதிநிதியாக உள்ளேன். மேலும், விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படாமல்தொடர்ந்து கொண்டே இருப்பது வலியேற்படுத்தக் கூடியதாக உள்ளது”. என்றும் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை அமைதியான வழியில் தீர்க்கும் வகையிலும் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வகையிலும் வெளியிட வேண்டுமென  அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தாண்டு ஜனவரி மாதம் மூன்று வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தடைவிதித்த உச்சநீதிமன்றம், பாரதிய கிசான் யூனியனின் தலைவர் பூபிந்தர் சிங் மான், மகாராஷ்டிராவின் ஷெட்கரி சங்க்தனாவின் தலைவர் அனில்  கான்வட், தெற்காசியாவின் இயக்குனர் பிரமோத் குமார் ஜோஷி, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவை அமைத்தது.

source: தி வயர்

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்