Aran Sei

‘வீழ்ச்சியின் விளிம்பில் விவசாய சமூகம்’: விலை உயர்வுக்கு எதிராக பாகிஸ்தான் விவசாயிகள் டிராக்டர் பேரணி

விவசாய பொருட்கள் தொடங்கி எரிபொருள் வரையிலான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானின் முல்தான் நகரில் விவசாயிகள் சங்கம் டிராக்டர் பேரணியை நடத்தியுள்ளது.

மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மார்ச் 31 ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

நேற்று (மார்ச் 19), பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் கிசான் இத்தேஹாத் விவசாயிகள் சங்கத்தின் தலைமையில், மின்சாரம், உரம் போன்ற விவசாய பொருட்கள் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையுயர்வை கண்டித்து, அந்நகர வீதிகளில் டிராக்டர் பேரணி போராட்டத்தை நடைபெற்றுள்ளது.

குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர், விவசாயிகள் உரிமைகள் – இமாச்சல பிரதேசத்தில் தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்

தங்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி, பல்வேறு இடங்களில் பேரணியை நிறுத்தி முழக்கங்களை விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.

இம்ரான் கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) அரசானது விவசாய விளைப் பொருட்களை மிகவும் குறைந்த விலை கொடுத்து எங்களிடம் வாங்குவதால், உற்பத்திக்கான வரவு செலவை சமன் செய்யக்கூட முடியாமல், நஷ்டமடைகிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

டீசல், மின்சாரம் மற்றும் உரங்கள் போன்றவற்றின் விலையுயர்வு தங்கள் மீது திணிக்கப்படுவதாக கூறும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவர், “எல்லாவற்றின் விலையும் உயர்ந்துவிட்டது. விவசாய சமூகம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது.” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்