Aran Sei

போராட்டக் களத்தில் மற்றொரு உயிரிழப்பு – தற்கொலைக்கு அரசே காரணம் என்று விவசாயி கடிதம்

டெல்லி – உத்தரபிரதேச எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள 70 வயதுடைய விவசாயி ஒருவர், தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்த விவசாயி, உத்தபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த காஷ்மீரா சிங் என்று, பாரதி கிசான் சங்கத்தின் துணைத் தலைவர் உறுதி செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை – உடல் பாகங்களை விற்று கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கடிதம்

“அவரும், அவருடைய குடும்பத்தினரும் போராட்டத்தில் பல நாட்களாக கலந்துகொண்டுள்ளனர். அவருடைய கடைசி கடிதத்தில் விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளாத, தற்போதைய விவசாயிகளின் அவல நிலைக்கு காரணமான அரசே இதற்கு பொறுப்பு என்று அவர் எழுதியுள்ளார்” என்று பாரதிய கிசான் சங்கத்தின் துணைத் தலைவர் ராஜ்விர் சிங் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் சங்கத்தைச் சேர்ந்த மனோஜ் ஷர்மா என்பவர், காஷ்மீரா சிங் பணக்கார விவசாயி என்றும், ‘லாங்கர்’ என்று அழைக்கப்படும் அன்னதான கூடங்களுக்கு உதவிகள் செய்துவந்தார் என்றும் கூறியுள்ளார்.

பிரதமரை நம்பாத விவசாயிகள் – நரேந்திர மோடியின் வாய்வீச்சு வீரியம் இழக்கிறதா?

இந்திராபுரத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் அன்சூ ஜெயின் “உயிரிழந்தவரின் குடும்பத்தினரும், பேராட்ட கமிட்டியும் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை. அவர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, உயிரிழந்தவரின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவருடைய உடலையும், கடைசி கடிதத்தையும், நடமாடும் கழிவறையிலிருந்து மீட்டுள்ளோம். தூக்கு போட்டதால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்பற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. கடிதத்தில், இதற்கு யாரையும் பொருப்பாக்கவில்லை” என்று கூறியதாக தி இந்து செய்தி கூறுகிறது.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

டெல்லி, காசியாபாத் எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (01.01.2021), 57 வயதுடைய, பாக்பாத் பகுதியை சேர்ந்த விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், போராட்ட குழுவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் கடும் குளிரை எதிர்கொள்வதற்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்துவருவதாகவும், துணை காவல் கண்காணிப்பாளர் அன்சூ ஜெயின் தி இந்து –விடம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்