வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு வரும் செப்டம்பர் 25 அன்று நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பைச் சார்ந்த ஆஷிஷ் மிட்டல், “நாங்கள் செப்டம்பர் 25 நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இது கடந்தாண்டு அதே தேதியில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைப் போன்று நடைபெறுகிறது. இந்தப் போராட்டம் கடந்தாண்டை விட சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகள் மாநாட்டில் 22 மாநில பிரதிநிதிகள், ஏறத்தாழ 3௦௦ விவசாயச் சங்கங்கள் மற்றும் பெண்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் நலன்களுக்காக இயங்கக்கூடிய அமைப்புகள் ஆகியவை பங்கேற்றனர் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, “அரசாங்கம் எவ்வாறு பெருமுதலாளித்துவ நிறுவனங்களுக்கு சார்பாக சட்டங்களை இயற்றி விவசாய சமூகத்தைத் தாக்கி வருகிறது. சந்தையைக் கைப்பற்றுவதன் வழியாக, விவசாயிகளின் விளைபொருட்கள் குறைந்த விலையில் எப்படி வாங்கப்படுகிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.” என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பைச் சார்ந்த ஆஷிஷ் மிட்டல் தெரிவித்துள்ளார்.
source: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.