உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த, ஜனவரி 26 ஆம் தேதி, குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் காவல்துறையினருக்கும், பேரணியில் கலந்துகொண்ட விவசாயிகளில் ஒரு பகுதியினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஹரியானா மாநிலத்தின் டெல்லியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அம்மாநில அரசு இணைய சேவையை நிறுத்தியது. இதுகுறித்தும், விவசாயிகளின் தொடர் போராட்டம் குறித்தும், அமெரிக்காவின் சிஎன்என் தொலைகாட்சியின் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில். பாப் பாடகி ரிஹான்னா மறுபதிவு செய்துள்ளார். அந்த பதிவில் “இது குறித்து (விவசாயிகள் போராட்டம் குறித்து) நாம் ஏன் பேசுவதில்லை?” என்று ரிஹான்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான ரிஹான்னாவின் இந்த பதிவு, சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் பலரும் ரிஹான்னாவின் கருத்திற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.
Rihanna (@rihanna) literally did more for the #FarmersProtest in one tweet than all of these silent Bollywood actors.
— Hansraj Meena (@HansrajMeena) February 2, 2021
எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா தனது டிவிட்டர் பக்கத்தில், “அமைதியாக இருக்கும் இந்த பாலிவுட் நடிகர்களை விட, ரிஹான்னா தனது ஒரே ஒரு பதிவின் மூலம் விவசாயிகள் போராட்டத்திற்கு மிகப்பெரிய விஷயத்தை செய்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
காலித் பெய்தூன் என்ற டிவிட்டர் பயன்பாட்டாளர் தனது டிவிட்டர் பக்கத்தில், மோடி அரசின் அடக்குமுறையாலும், டிவிட்டர் நிறுவனத்தின் இருட்டடிப்பாலும் ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு, ரிஹான்னா தேவையான வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Salute to Rihanna for shedding light on the #FarmersProtest in #India – she is bringing needed attention to a movement silenced by Twitter and violently suppressed by the Modi government pic.twitter.com/x5GLJSjqPw
— Khaled Beydoun (@KhaledBeydoun) February 2, 2021
இவ்வாறு பலரும் ரிஹானாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், #RihannaSupportsIndianFarmers என்ற ஹாஷ்டாக் நேற்று இரவு இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது.
இதனிடையே, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ரிஹான்னாவுக்கு, விவசாயிகளின் போராட்டக்குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Glad!
Thanks @rihanna for expressing your concern towards the ongoing farmer protest
'Hopeful'; that the masses stand by the truthWhole world can see but why can't govt.?? https://t.co/5p0dBcJHy6
— Kisan Ekta Morcha (@Kisanektamorcha) February 2, 2021
கிசான் எக்தா மோர்ச்சாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ரிஹான்னாவின் பதிவுக்கு மேல் “மகிழ்ச்சி! விவசாயிகளின் தொடர் போராட்டம் குறித்து உங்கள் அக்கறையை வெளிப்படுத்தியதற்கு நன்றி @rihannna (ரிஹானா). மக்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஒட்டுமொத்த உலகமும் பார்க்கிறது ஆனால், அரசு ஏன் செய்ய மறுக்கிறது?” என்று பதிவிடப்பட்டுள்ளது.
ரிஹான்னா, தனது டிவிட்டர் பக்கத்தில் மற்றொரு பதிவில், மியான்மரில் நடந்துள்ள ராணுவ புரட்சியை கண்டிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.