Aran Sei

கொட்டிய மழை நீரால் மூழ்கிய போராட்டக் களங்கள் – விடாது போராடும் விவசாயிகள்

டெல்லி-உத்திரபிரதேச எல்லையில் காசிப்பூரில் மழைநீர் தேங்கிய சாலையில் பாரதிய கிசான் ராகேஷ் திகாத், அவரது ஆதரவாளர்களுடன் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அமைத்த கூடாரங்கள் மற்றும் கட்டமைப்புகள் கனமழையால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சாலையில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாத் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். இங்கிருந்து (காசிப்பூர்) டெல்லி நோக்கிச் செல்லும் வடிகால்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி வருகிறோம். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை கவனத்தில் கொள்ளவில்லை” என பாரதிய கிசான் சங்கத்தின் ஊடக பொறுப்பாளர் தர்மேந்திர மாலிக் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்கள், உணவு கூடங்கள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகள் அனைத்தும் கனமழை மற்றும் மழைநீர் தேக்கத்தால் சேதமடைந்துவிட்டது என அவர் கூறியுள்ளார்.

”தற்போது விவசாயிகள் மூன்று பருவநிலைகளையும் பார்த்துவிட்டனர். அவர்களுக்கு எதை கண்டும் பயமில்லை” என தர்மேந்திர மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒன்றிய அரசால் இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் டெல்லியின் எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளுடன் அரசு தரப்பு நடத்திய 11 கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்