Aran Sei

விவசாயிகள் போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை: என்று தீரும் இந்த அவலம்?

ன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த பஞ்சாபைச் சேர்ந்த 45 வயது விவசாயி, டெல்லி சிங்கு எல்லைக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குர்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்ட அவர், பஞ்சாப் மாநிலம் ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மீட்கப்பட்ட குர்பிரீத் சிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சோனிபட்டில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் குண்ட்லி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் பட விவகாரம்; நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் – பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

பிப்ரவரி 7 ஆம் தேதி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த 52 வயதான கரம்வீர் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், தற்கொலை செய்து கொண்ட அவரது, உடல் அருகே கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும், பகதூர்கார்க் காவல்நிலைய அதிகாரி விஜய் குமார் தெரிவித்திருந்தார்.

“அன்புள்ள விவசாய சகோதரர்களே, மோடி அரசு தேதிக்குத் தேதி தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறது. இந்தக் கருப்புச் சட்டங்கள் எப்போது திரும்பப் பெறப்படும் என்பது யாருக்கும் தெரியவில்லை” என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

அதே திக்ரி எல்லையில், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாப்பை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் விஷம் குடித்து இறந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேகலாயாவுக்கு மாற்றம் – மக்களுக்கு ஆதரவாக பிறப்பித்த உத்தரவுகள்தான் காரணமா?

முன்னதாகச் சீக்கிய மத போதகரான சாந்த் ராம் சிங், சிங்கு எல்லைப்பகுதியில்,  “விவசாயிகள் வலியைத் தாங்க முடியவில்லை” எனக் கூறி தற்கொலை செய்துகொண்டார்.

‘பெரியாறு பேபி அணையை வலுப்படுத்தி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

இவ்வண்ணம், விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரையிலான விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Source: PTI, Thehindu, The wire.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்