Aran Sei

மகாத்மா காந்தி நினைவு நாள்: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க தலைவர்கள்

காத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் சங்கத் தலைவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களைத் திரும்ப்ப பெறகோரி டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ம் தேதி டெல்லி நோக்கிய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. கலவரத்திற்கு காரணம் வலது சாரிகள்தான் என்று எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலர் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

வீட்டுக்கு ஒருவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் – ஊர் கூடி முடிவெடுத்த பஞ்சாப் கிராம விவசாயிகள்

டெல்லி எல்லைகளான சிங்கு, காஸிபூர், திக்ரித் உட்பட விவசாயிகள் பேராட்டம் நடத்திவரும் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று (ஜனவரி 30) மகாத்மா காந்தியின் 74 ஆது நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் சங்கத் தலைவர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். மேலும், போராட்டங்கள் நடைபெற்று வரும் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ஒருநாள் உண்ணாவிரதத்தைக் மேற்கொண்டுள்ளனர்.

‘மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன்’ – பேரறிஞர் அண்ணா

இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சாம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் மூத்த விவசாயிகள் சங்கத் தலைவரான அபிமன்யு கோஹர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது கூறுகையில், ”மகாத்மா காந்தியின் நினைவு தினத்திற்காக இன்றைய தினம் நாங்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம். ஆளும் மத்திய அரசு எங்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அமைதியான போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறது. ஆனால், வரும் நாட்களில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் எங்களுடன் சேரவுள்ளனர். இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து பலம் பெறும்.” என்று தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்