லக்கிம்பூர் கெரி வன்முறைக்கு காரணமான ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய போராடும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று (அக்டோபர் 3), உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாய சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கியுள்ளனர்.
அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விவசாயிகள் மீது மோதிய கார்களின் ஒன்றை ஓட்டி வந்துள்ள அமைச்சர் மற்றும் அவரது மகனை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் போராடும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயல் என்று ஆளும் பாஜக மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததோடு, இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வலியுறுத்தினர்.
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, லவ்ப்ரீத் சிங் (20), தல்ஜீத் சிங் (35), நச்சட்டர் சிங் (60) மற்றும் குர்விந்தர் சிங் (19) என உயிரிழந்த நான்கு விவசாயிகளை அடையாளம் கண்டுள்ளது. 15 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் மோர்ச்சா கூறியுள்ளது.
Source: The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.