சண்டிகரில் கரும்பு விலை உயர்த்த வேண்டுமெனக் கோரி அம்மாநில விவசாயிகள் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள பெரோஸ்பூர் மண்டல ரயில்வே நிர்வாகம், 5௦க்கும் மேற்ப்பட்ட ரயில்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இதே போன்று, 54 ரயில்கள் வேறொரு பக்கம் திருப்பிவிடப்பட்டுள்ளது அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மாநில அரசு உறுதிபடுத்தியுள்ள தொகையை அதிகரிக்க வேண்டுமெனவும், நிலுவைத்தொகை 200 முதல்250 கோடியை உடனடியாக வழங்க வேண்டுமெனக் கோரி விவசாயிகள் நேற்றிலிருந்து காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பஞ்சாப் மாநில அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜலந்தர் மற்றும் சாஹிரு விவசாயிகள் சாலை மற்றும் ரயில் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் லூதியானா- அம்ரிதசரஸ், லூதியானா- ஜம்மு ரயில் வழித்தடங்களும் முடக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, ஜலந்தர், அமிர்தசரஸ் மற்றும் பதான்கோட் சாலைகளும் விவசாயிகள் போரட்டத்தால் முடங்கியுள்ளது.
source: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
தொடர்புடைய பதிவுகள்:
வால்மீகியோடு தாலிபான்களை ஒப்பிட்ட கவிஞர் – சாகித்ய அகாடமி விருது பெற்றவர் மீது வழக்குப்பதிவு
பெட்ரோல் விலை குறைவாக வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள் – மத்திய பிரதேச பாஜக தலைவர் கருத்து
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட 935 கோடி – தமிழ்நாடு முதலிடம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.