விவசாயிகள்மீது தடியடி நடத்தியதற்காக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், தடியடிக்கு காரணமாக இருந்த உயர்மட்ட அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் மாநில பாஜக தலைவர் ஓ.பி. தங்கர் கலந்து கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக பேரணி சென்ற விவசாயிகள்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதில், 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்தனர்.
இது நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், தடியடி தொடர்பாக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மன்னிப்பு கோர வேண்டும் என மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ”தடியடி நடத்தியதற்காக விவசாயிகளிடம் ஹரியானா முதலமைச்சர் மனோஜ் லால் கட்டார் மன்னிப்பு கேட்க வேண்டும்… ஹரியானா முதல்வர் விவசாயிகள்மீது லத்தியை பயன்படுத்துகிறார். ஒன்றிய அரசு கூட வன்முறையைப் பயன்படுத்தவில்லை… வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம் என நான் உயர்மட்ட தலைமைக்கு கூறினேன்” என தெரிவித்தார்.
”துணை கோட்ட நீதிபதி ஆயுஷ் சின்ஹா உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் அந்த பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர்… அரசாங்கம் அவருக்கு ஆதரவளித்து வருகிறது.” என குற்றம்சாட்டினார்.
அந்த அதிகாரிமீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு அரசு எந்த ஆறுதலையும் வழங்கவில்லை என்ற உண்மை, ஏமாற்ற அளிப்பதாக தெரிவித்துள்ள மாலிக், “விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து 600 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்… ஆனால், அரசாங்கத்தில் இருந்து யாரும் ஆறுதல் வார்த்தை கூட பேசவில்லை” என குறிப்பிட்டார்.
விவசாயிகள்மீது தடியடி நடத்தியதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஆகியோர் கண்ட்னம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : PTI
தொடர்புடைய செய்திகள் :
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.