Aran Sei

கோடைகாலத்தை எதிகொள்ள போராட்ட களத்தில் செங்கல் வீடுகள் – முடிவில்லா போராட்டம் நோக்கி விவசாயிகள்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளும் அவர்களது உறுவினர்களும், போராட்டக் களத்திற்கு அருகில் செங்கற்கல் வீடுகளை கட்டத் தொடங்கியுள்ளனர்.

இனி வரவுள்ள கோடைக்காலத்தை சமாளிப்பதற்காகவும் இப்போராட்டத்தை நீண்ட காலத்துக்கு நடத்தும் நோக்கிலும், விவசாயிகள் இந்த வீடுகளை கட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லி திக்ரி எல்லையில் கட்டப்படுகிற முதல் செங்கற்கல் வீட்டை பற்றி அதன் உரிமையாளரான ரோஹ்தாஷ் கில், “வீட்டு ஜன்னலில் பச்சை கிளி பொம்பை ஒன்றை கட்டுவோம். எங்கள் கிராமங்களில் அது பாரம்பரிய பழக்கம். சுமார் 10-12 பேர் சேர்ந்து இரண்டு நாட்களில் இந்த வீட்டைக் கட்டினோம்.” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

‘நான் போராட்டத்தில் இருந்தாலும், வயல்களை கிராமத்தினர் பார்த்துக் கொள்வார்கள்’ – ஒன்றிணைந்து அறுவடையை கையாளும் விவசாயிகள்

மேலும், திக்ரி எல்லையில் உள்ள கடைகளில் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருள் எளிதில் கிடைப்பதாகவும், வீடு அமைந்துள்ள இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கடையிலிருந்து செங்கல் மற்றும் சிமென்ட் வாங்கியதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தி கூறியுள்ளது.

ஹரியானாவில் உள்ள சார்க்கி தாத்ரியைச் சேர்ந்த 41 வயதான அனில் மாலிக் என்ற விவசாயி, “நாங்கள் வயல்வெளிகளிலும் வீடுகளைக் கட்டுவோம். இங்குத் தொழில்முறை கட்டுமானத் தொழிலாளர்கள் யாரும் இல்லை. சுவரின் நடுவில் ஒரு சில இடைவெளிகளை விட்டு கட்டுவோம். அதன் வழியாக, குளிர் காற்று எங்கள் வீட்டை நிரப்பும்.” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்