Aran Sei

குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் – இந்திய உணவுக் கழகத்தில் விவசாயிகள் போராட்டம்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவானது, இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ) பல்வேறு அலுவலகங்களில் போராட்டங்களை நடத்தியதோடு, விவசாய விளைப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் எழுப்பியுள்ளன.

கோதுமை கொள்முதல் செய்வதற்கு ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) சமர்ப்பிக்கும் முடிவைத் திரும்பப் பெறுதல், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மத்திய அரசு பண தரும் முறையைத் திரும்பப் பெறுதல் மற்றும் பயிர்களுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல் போன்ற கோரிக்கைகள் முழங்கப்பட்டன.

“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்

இந்திய உணவுக் கழகத்தின் கொள்முதல் முறையை வலுப்படுத்தக் கோரி, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சருக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும், “அக்கடிதத்தில், பயிர்கள் உறுதி செய்யப்பட்ட குறைந்த தட்ச ஆதரவு விலையில்தான் வாங்கப்பட வேண்டும். அவ்விலைக்கு கீழே பயிரை வாங்கும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்