Aran Sei

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய விவசாயிகளின் நாடாளுமன்றம்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும்வரை நடத்த திட்டம்

ன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தினமும் 200 பேர் கொண்ட விவசாய குழு, ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி தந்திருந்தது.

இன்று (ஜூலை 22) தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதிவரை, காலை 11 மணி தொடங்கி மாலை 5 மணிவரை, ஜந்தர் மந்தர் மைதானத்தில் ‘விவசாயிகள் நாடாளுமன்றம்’ நடத்த விவசாயிகளை அனுமதிக்க டெல்லி அரசும் காவல்துறையும் சம்மதித்துள்ளன.

ஹரியானாவை தொடர்ந்து பஞ்சாபிலும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: முற்றுகையிடப்படும் பாஜக தலைவர்கள்

அனைத்து கொரோனா விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடக்கும் என்றும் உறுதிமொழி அளிக்குமாறு காவல்துறையின் சார்பில் விவசாயிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதி, டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைக்குப் பின்னர், விவசாயிகள் டெல்லி நகருக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதன்முறை.

source; ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்