Aran Sei

விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு: டெல்லி எல்லைக்கு டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்

Image Credit : thewire.in

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூருக்கு டிராக்டர்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

வருபவர்கள் பலர் தங்கள் டிராக்டர் டிராலிகளில் காய்கறிகள், மாவு, பருப்பு மூட்டைகள், மசாலா மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு வந்து, நீண்ட போராட்டத்திற்கு நாங்கள் தயாராக வந்துள்ளோம் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பாரதிய கிசான் யூனியனி  தலைமை செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தனது டிவிட்டர் பக்கத்தில், “மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த ஈடு இணையற்ற போராட்ட ஆண்டு இது. நாங்கள் போராடி வெற்றி பெற்றோம். இன்னும் போராடி வெல்வோம். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம் விவசாயிகளின் உரிமை” என்று கூறியுள்ளார்.

பாரதிய கிசான் மோர்ச்சாவின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் சௌரப் உபாத்யாய் கூறுகையில், “நாளை(நவம்பர் 27) சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் கூட்டத்தைக் கூட்டவுள்ளோம். அதன் பின் எங்களது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும். நாங்கள் நவம்பர் 29 ஆம் தேதி டெல்லியை நோக்கி அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். அது குறித்த அறிவிப்பு சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் கூட்டத்தின் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இன்று அதிகாலையில் ஏராளமான விவசாயிகள் டெல்லி எல்லையை அடையத் தொடங்கியுள்ளனர். மாலைக்குள் காசிப்பூருக்கு மட்டும் 50,000 பேர் வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்