Aran Sei

சில சங்கங்களிடம் மட்டும் பேச்சுவார்த்தை – விவசாயிகள் ஒற்றுமையை குலைக்க திட்டம்

த்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பின் பேரில், நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்ற நிலையில், 13 விவசாய சங்கங்களின் தலைவர்களை மட்டும மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷ சந்தித்துள்ளார். குறிப்பிட்ட சில சங்கங்களின் தலைவர்களை மற்றும் சந்தித்ததால் விவசாய சங்கங்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன்  இன்று நடைபெற இருந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னர்  அமித்ஷாவுடன் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இதுவரை, விக்யான் பவனில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில், பஞ்சாப் விவசாய சங்கங்களிலிருந்து 32 பிரதிநிதிகளும், பிற பகுதிகள் மற்றும் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த ஒரு சில தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், குறிப்பிட்ட சில சங்கங்களை மட்டும் அழைப்பது மத்திய அரசின் பிரித்தாளும் தந்திரம் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் – வரலாறு படைக்கும் பெண்கள்

பஞ்சாபில் உள்ள 32 விவசாய சங்கங்களிலிருந்து 9 விவசாய சங்க பிரதிநிதிகளும்,  உத்தர பிரதேசத்தின்  பாரதீய கிசான் சங்கத்தைச் சார்ந்த ராகேஷ் திகாய்ட், ஹரியானாவின் பாரதீய கிசான் சங்கத்தைச் சார்ந்த குர்ணம் சிங் சதுனி, ராஷ்ட்ரிய கிசான் மஹாசங்த்தைச் சேர்ந்த ஷிவ் குமார் காகாஜி, அனைத்து இந்திய கிசான் சபையின் ஹன்னன் மொல்லா ஆகியோரை  தனிப்பட்ட முறையில் (அதிகாரபூர்வமற்ற சந்திப்பு) உள்துறை அமைச்சர் சந்தித்துள்ளார்.

“இது ஒரு தனிப்பட்ட சந்திப்பு (அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு). கடந்த கூட்டத்தில் வாக்குறுதியளித்தபடி, அரசாங்கத்தின் முன்மொழிவை உள்துறை அமைச்சர் வழங்குவார் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.  அமித் ஷாவுடன் விவாதம் நடத்த நாங்கள் விரும்பவில்லை. உள்துறை அமைச்சர் கூறுகின்ற முன்மொழிவை நாங்கள் கேட்டுக்கொண்டு வந்து விவசாய சங்கங்களிடம் கூறுவோம்” என அமித்ஷாவை சந்தித்த விவசாய தலைவர் ஒருவர் தி இந்து -விடம் கூறியுள்ளார்.

‘அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளை வீட்டில் விட்டு, போராட்டத்திற்கு வாருங்கள்’ – விவசாயிகள்

உள்துறை அமைச்சருடைய கூட்டத்தில்  கலந்து கொள்ளாத உக்ரஹானின் பாரதீய கிசான் சங்க தலைவர் ஜோகிந்தர் சிங், “விவசாயச் சங்கங்கள்  உள்துறை அமைச்சரை தனித்தனியாக சென்று சந்தித்திருத்தக் கூடாது. ஏனெனில் இந்த நடவடிக்கை, போராடும் மக்களிடையே தவறான புரிதலை” உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தின் தொடக்கத்தில்  அரசாங்கம் விவசாயிகள் தனித்தனியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது அந்த அழைப்பை நாங்கள் மறுத்துள்ளோம். “அனைத்து அமைப்புகளையும் கூட்டாக அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருந்துள்ளோம். விவசாய சட்டங்கள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும், நாடு முழுவதும் அனைத்து பண்ணை விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கான சட்டத்தை இயற்றவும், பொது விநியோக முறையை வலுப்படுத்தவும் எங்கள் அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கிறோம். போராடும் விவசாயிகள் இந்த கோரிக்கைகளுக்கு குறைவான எதையும் ஏற்க மாட்டார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்