Aran Sei

300 நாட்களை கடந்த விவசாயிகள் போராட்டம் – செவி சாய்க்குமா ஒன்றிய அரசு?

ன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாயச் சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகள் போராட்டம் 300 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் மனஉறுதிக்கு இந்தப் போராட்டம் ஒரு சான்று என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா கூறியுள்ளது.

இதுதொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் போராட்டத்தைத் தொடங்கி 300 நாட்கள் ஆகிவிட்டன. இந்தியாவின் உணவு மற்றும் விவசாய அமைப்புகளை ஒரு கார்ப்பரேட் கைக்கொள்வதற்கு எதிராக போராட்டக்காரர்கள் அமைதியாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி அரசுக்குப் போராடுபவர்களின் கோரிக்கைகள் தெளிவாகவும் தெரியும். ஆனால், விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பிடிவாதமாக உள்ளது.” என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொட்டிய மழை நீரால் மூழ்கிய போராட்டக் களங்கள் – விடாது போராடும் விவசாயிகள்

“விவசாயிகள் நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் சக்தியாக இருந்தாலும், தேர்தலில் விவசாயிகளின் வாக்குகளால் பாஜக வென்றது என்பதை மறந்துவிட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டமானது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் விருப்பத்திற்கும், தீர்கத்திற்கும் நம்பிக்கைக்கும் ஒரு சான்றாக மாறியிருக்கிறது.” என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், சம்யுக்த் கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ள, பாரத் பந்த்திற்கான (செப்டம்பர் 27) ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

“சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் சங்கங்களும் விவசாயிகளும் பாரத் பந்த்திற்கு ஆதரவளித்து இருக்கின்றன. இது இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் இயக்கமாக மாறி வருகிறது. தொழிலாளர் சங்கங்கள், வர்தக சங்கங்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர் சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சைக்கிள் மற்றும் வாகன பேரணிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.” என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்