Aran Sei

இந்து, இஸ்லாம் என சமூகத்தைப் பிரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் – ராகேஷ் திகாயத்

மூகத்தை பிளவுப்படுத்த முயல்பவர்களிடமும் இந்து-இஸ்லாமிய பிரச்சினைகளைத் தூண்டுபவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள் என்று விவசாயிகளை பாரதிய கிசான் யூனியனின் மூத்த தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள ராகேஷ் திகாயத், “வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவசாயிகள் முழு தெளிவுடன் இருக்கிறார்கள். யாரும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. அடுத்த சில வாரங்களுக்கு, இந்து-இஸ்லாம் மற்றும் ஜின்னா ஆகியவை அரசியல் உரையாடலில் வழக்கமான தலைப்புகளாக இருக்கும். இதுபோன்ற கவனச்சிதறல் யுத்திகள் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘மதுராவை முசாபர்நகராக்க அனுமதியாதீர்’- கலவரங்கள் அனைத்தையும் அழித்துவிடுமென ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

“மார்ச் 15ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் இந்து-இஸ்லாம் மற்றும் ஜின்னா ஆகிய தலைப்புகள் அதிகாரப்பூர்வ விருந்தினர்களாக இருக்கப் போகின்றன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பாதி விலையில் விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, ​​அவர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று யாரும் அவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்