Aran Sei

பாஜக எம்எல்ஏ தாக்கப்பட்ட விவகாரம் – வழக்கை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டம்

ஞ்சாப் மாநிலம் மலௌத் பகுதியில், பாஜகவை சேர்ந்த அபோகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண் நராங் தாக்கப்பட்டது தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அருண் நராங் தாக்கப்பட்டது தொடர்பாக 4 பேரை ஞாயிற்றுகிழமை (மார்ச் 28) கைது செய்திருக்கும் முக்சர் மாவட்ட காவல்துறையினர், 23 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது.

அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு, பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், மலௌத்தின் பதிண்டா சௌக் பகுதியில் நேற்று (மார்ச் 29) தர்ணாவில் ஈடுபட்டனர்.

போராட்டக்களத்தில் ஹோலி கொண்டாடிய விவசாயிகள் : விவசாய சட்டங்களை விளக்கும் புத்தகம் வெளியீடு

பின்னர் இரவு 7.30 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், இந்தப் புகார் தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என உறுதியளித்ததை அடுத்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

தாக்குதல்குறித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயி கரம்ஜித் சிங் என்ற விவசாயி, “ஒருவரின் ஆடைகளைக் கிழிப்பது நல்லதல்ல, ஆனால் எங்கள் சங்க உறுப்பினர்கள் ஒருபோதும் இதைச் செய்யவில்லை. நாங்கள் அடையாள எதிர்ப்பு மட்டுமே செய்கிறோம். பாஜக தொண்டர்கள் இதைத் திட்டமிட்டு நடத்திவிட்டு பழியை விவசாயிகள்மீது சுமத்திவிட்டனர்” என தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

” ‘லவ் ஜிகாத்’, மாட்டிறைச்சி குறித்து கருத்து சொல்ல முடியாது ” – நேர்காணலை விட்டு வெளியேறிய கேரள பாஜகவின் மெட்ரோமேன் ஈ ஶ்ரீதரன்

இந்த வழக்கை விசாரித்து வரும் முக்சார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜ்பால் சிங் ஹண்ட்ரால், “இனி இந்த வழக்கு தொடர்பாக யாரையும் கைது செய்யப் போவதில்லை. இறந்த விவசாயி ஒருவர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற புகாரைப் பற்றி நாங்கள் விசாரணை செய்வோம். விவசாயிகள் நாள் முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நியாயமான விசாரணை செய்யப்படும் என்று உறுதியளித்தோம். அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்றபோது அந்த இடத்தில் இல்லாத யாரையும் நாங்கள் கைது செய்யப் போவதில்லை. எம்.எல்.ஏ.,வை கொலை செய்ய முயன்றது மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது,” என தெரிவித்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்