Aran Sei

விவசாயிகளுக்கு அரசாங்கத்தையே கவிழ்க்கும் சக்தி உள்ளது- ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தெலுங்கானா முதல்வர் போராட்டம்

தெலுங்கானா விவசாயிகளிடமிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் டெல்லியில் இன்று (ஏப்ரல் 11) ஒரு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கோடை காலத்தில் நெல்லை கொள்முதல் செய்யுங்கள் – ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட இருக்கும் தெலுங்கானா முதல்வர்

இந்த தர்ணா போராட்டத்தில், தெலுங்கானா அமைச்சர்கள், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அரசு புதிய சீரான நெல் கொள்முதல் கொள்கையை 24 மணிநேரத்தில் உருவாக்க வேண்டும். இல்லையெனில், தேசிய அளவில் எங்களது எதிர்ப்பை கொண்டு செல்வோம் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘பாஜக ஆட்சி டபுள் என்ஜின் கிடையாது; ட்ரபுள் என்ஜின்’ -தெலுங்கானா முதலமைச்சர் கிண்டல்

விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம், ஏனெனில் அவர்களுக்கு அரசாங்கத்தையே கவிழ்க்கும் சக்தி உள்ளது என்று பிரதமர் மோடிக்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“விவசாயிகள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல; அவர்கள் தங்கள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைத்தான் கோருகிறார்கள், அதற்கான உரிமையும் அவர்களுக்கு உண்டு என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிரான மூன்றாவது அணி: மஹாராஷ்டிர முதலமைச்சரை நேரில் சந்தித்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

தெலுங்கானா அரசின் இப்போராட்டத்திற்குப் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

மாநிலத் தலைவர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றிய அரசு “அவமரியாதையாக” நடத்துகிறது என்று சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

‘அதிகாரப் பேச்சை தவிர்க்காவிட்டால் பாஜக தலைவர்களின் நாக்கை அறுப்போம்’ – தெலுங்கானா முதலமைச்சர்

மேலும், தெலுங்கானா விவசாய துறை அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி ஒன்றிய அரசின் உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்த போது அமைச்சர் அவரை மரியாதைக் குறைவாக நடத்தியதாக சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

Source : The Wire

தமிழன்னை படம்: வலது சாரிகள் எதிர்ப்பு. எங்க அம்மா கருப்பா இருந்தா உனக்கென்ன? மக்கள் கேள்வி

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்