ஹரியானா மாநிலத்தில் உள்ள டெல்லியின் திக்ரி மற்றும் குண்டலி எல்லைகளில் நடைபெற்று வரும் போராட்ட களங்களுக்கு மீண்டும் விவசாயிகள் திரும்பி வருகின்றனர்.
கொரோனா பரவலால் தற்காலிமாக நிறுத்திவைக்கபட்டிருக்கும் போராட்டம், கொரோனா பரவல் குறைந்த பிறகு மீண்டும் தீவிரப்படுத்தப்படும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஒன்றிய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், கடந்த ஆறு மாதகாலமாக டெல்லி எல்லைகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் ஹிஸ்சார் மாவட்டத்தில், கொரோனா மையத்தைத் திறக்க வந்த ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரின் ஹெலிக்காப்டரை தரையிறங்க விடாமல் விவசாயிகள் தடுக்க முற்பட்டனர்.
‘சென்னையில் பிரதமரைக் கொல்லும் தமிழ்ப் பெண்’ – தமிழர்களை எப்படி சித்தரிக்கிறது #TheFamilyMan2 ?
இதனைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மற்ரும் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடுகளைத் தடுக்கும் 3 சம்பவங்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாப்லி அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்மீது முதல் தகவல் அறிக்கை பதியபட்டுள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பினரைத் தாக்க முற்பட்டதாகவும், கார் கண்ணாடிகளை உடைத்தாகவும் விவசாயிகள்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
“போராட்டங்களில் தொடந்து ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் தொடர்ந்து உதாசீனப்படுத்தும் மற்றும் இழிவுபடுத்தும் செயல்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் பொறுமை இழந்துவிட்டனர்” என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் குர்னம் சிங் சாருனி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலின் காரணமாகவே விவசாயிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது எனக்கூறிய அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் தர்ஷன் பால், “உற்சாகம் அப்படியே தான் உள்ளது. அழைப்பு விடுத்தால் லட்சக்கணக்காணோர் டெல்லி நோக்கிப் பயணிக்கத் தயாராக உள்ளனர்.” என கூறியுள்ளார்.
மேலும், கொரோனா பரவல் குறைந்த பிறகு போராட்டம் மீண்டும் வலுப்பெறும் என விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.