Aran Sei

‘போராட்டக்களங்களில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது’ – வலுவிழக்கிறதென ஒன்றிய அரசு பொய் கூறுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

ன்றிய அரசு இயற்றிய விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்துக்கொள்ள பஞ்சாபில் இருந்து விவசாயிகள் குழுக்கள் டெல்லி எல்லையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முக்கியமாக, பஞ்சாப்பில் உள்ள சங்ரூர், லூதியானா, பாட்டியாலா, ஜலந்தர் மற்றும் ரோப்பர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குழுக்கள், தங்கள் வாகனங்களில் டெல்லியில் உள்ள சிங்கு மற்றும் திக்ரி எல்லைக்கு புறப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் பலவீனமடைந்து வருவதாக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பரப்பி வருவது முழுக்க பொய் என்று கூறியுள்ள பாரதிய கிசான் யூனியன் தலைவர் பாலிபீர் சிங், “பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நடந்துகொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறது. விவசாயிகள் தொடர்ந்து போராட்டக் களங்களுக்கு வந்துக்கொண்டிருக்கிறார்கள். முழு பலத்துடன் போராடுகிறார்கள். மோடி அரசின் பிடிவாதமே விவசாயிகளின் பொறுமையை மீண்டும் மீண்டும் சோதித்து பார்க்கிறது. விவசாயிகளின் ஆன்மா எப்போதும் உயர்வானது. விவசாயிகள் போராட்டம் வலுவான நிலையில்தான் உள்ளது.” என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் போராட்டம் மறுபுறம் அறுவடை – ஒற்றுமையோடு களம் காணும் விவசாயிகள்

பாரதிய கிசான் யூனியனின் ஊடக செயலாளர் குர்விந்தர் சிங்,  “பஞ்சாப்பில் இருந்து அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்கள் வரும் நாட்களில் டெல்லிக்கு வந்து போராட்டத்தில் இணைவார்கள். மே 12 ஆம் தேதி, பஞ்சாப் மஜா பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கிய தங்கள் பயணத்தை தொடங்குவார்கள். போராட்டக்களங்களில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது.” என்று கூறியுள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்