டெல்லி விவசாயிகள் போராட்டம் “இருண்ட காலத்தில் தெரியும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்” என உலகப்புகழ் பெற்ற மொழியியலாளரும், சமூக செயல்பாட்டாளருமான நோம் சோம்ஸ்கி தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
மொழியியலாளர் நோம் சோம்ஸ்கி உடன் நாசா ஆய்வாளரும், திரைக்கலைஞருமான பெடப்ரதா பைன் காணொளிக்காட்சி வழியாக நடத்திய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
மேலும், விவசாயிகளின் போராட்டம் உலகத்திற்கே ஒரு முன்னுதாரணம் என நோம் சோம்ஸ்கி அந்தக் காணொளியில் கூறியுள்ளதாகவும் தி வயர் செய்தி குறிப்பிப்பிடுகிறது.
விவசாயிகளின் போராட்டம்குறித்து தெரிவித்துள்ள நோம் சோம்ஸ்கி, “விவசாயிகளின் போராட்டம் மிகமுக்கியமானது.அவர்கள்மீது அடக்குமுறை, வன்முறை, என எல்லா வகையான தாக்குதலும் தொடுக்கப்படுகிறது. ஆனாலும், அவர்கள் அங்கிருக்கிறார்கள், போராடுகிறார்கள், விவசாய சமூகத்தின் உரிமைக்காக மட்டுமல்லாது, இந்தியாவிற்காகப் போராடுகிறார்கள். ஆளும் வர்க்கம் குடிமக்களின் உரிமைகளிலும், நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.