Aran Sei

பாஜகவிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் – விவசாய சங்கம் அறிவிப்பு

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது எனப் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பல்பீர் சிங் ராஜ்வால் கூறியுள்ளார்.

சன்யுக்த் கிஷன் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு மேற்குவங்கத்தில் ஒருங்கிணைத்த சுற்று பயணத்திற்கு பின் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை கைவிடாவிட்டால் எத்தனை ஆண்டுகளானாலும் போராட்டம் தொடரும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

மேலும் ” உங்களின் விருப்பப்படி வாக்களியுங்கள் ஆனால் மோடிக்கு வாக்களிக்காதீர்கள் ” என்று குறிப்பிட்டு துண்டறிக்கை வெளியிட இருப்பதாகவும் பல்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்கத்தில் அவர்கள் ஐந்து மஹாபஞ்சாயத்துகளை நடத்தி இருக்கிறார்கள்.

பெண் விவசாயிகளின் இன்குலாப் மருதாணி – ‘மகளிர் தின வாழ்த்து சொன்ன பிரதமருக்கு போராடும் எங்கள் குரல் கேட்கவில்லையா?’

பஞ்சாப் மாநிலம், பட்டினடா பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்தீப் சிங் ,”சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்தே வங்கத்திற்கும் ,பஞ்சாப்பிற்கும் தொடர்பு உள்ளதாகவும், எனவே இங்கு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான பாஜகவிற்கு எதிராக போராட வந்துள்ளோம் ” என்றும் கூறியுள்ளார்.

SOURCE : THE WIRE

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்