Aran Sei

விவசாய சட்ட நகல்களை எரியூட்டி ஹோலி கொண்டாடிய விவசாயிகள் – இந்திய உணவு கழகத்தை முற்றுகையிட திட்டம்

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள், மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களை எதிர்க்கும் விதமாக ஹோலி அன்று கொளுத்தப்படும் நெருப்பில், அச்சட்ட நகல்களை எரித்துள்ளதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

நேற்று (மார்ச் 28), போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாய சட்டங்களின் நகல்களை கொளுத்தி, ஹோலி பண்டிகையை கொண்டாடினார்கள். வரும் ஏப்ரல் 5-ம் தேதி எஃப்சிஐ பச்சாவோ திவாஸ் [எஃப்சிஐ காப்போம்] கடைபிடிக்கப்படும். நாடும் முழுவதும் உள்ள இந்திய உணவு கழகத்தின் (எஃப்சிஐ) அலுவலகங்களை காலை 11 மணி தொடங்கி, மாலை 5 மணி வரை முற்றுகையிடுவோம்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்: தாக்குதல் நடத்திய விவசாயிகள்

குறைந்தபட்ச ஆதரவு விலை, பொது விநியோக திட்டம் ஆகியவற்றுக்கு மறைமுகமாக மூடுவிழா நடத்த மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் கடந்த சில ஆண்டுகளாக  இந்திய உணவு கழகத்திற்கு (எஃப்சிஐ) ஒதுக்கப்படும் பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில், இந்திய உணவு கழகமானது பயிர்களை கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது என்று அவ்வறிக்கையில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா குறிப்பிட்டுள்ளது.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்