Aran Sei

போராட்டக்களத்தில் ஹோலி கொண்டாடிய விவசாயிகள் : விவசாய சட்டங்களை விளக்கும் புத்தகம் வெளியீடு

மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியின் எல்லைகளின் போராட்டத்தில் ஈடுபட்டவரும் விவசாயிகள், ஹோலி மற்றும் சீக்கியர்களின் ஹோலா மொஹல்லா பண்டிகையையும் கொண்டாடியுள்ளனர்.

மேலும், விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் தனி சட்டம் இயற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

போராட்டக்களத்திலேயே விழா நிகழ்ச்சிகளையும் மஞ்ச் மண்டி முல்லம்பூரின்  ‘உத்தன் டா வேலா’ என்ற நாடகமும் நடத்தப்பட்டுள்ளது.

‘பெங்களூருவில் ஒரு டெல்லியை நிகழ்த்துங்கள்; நாற்திசையில் இருந்தும் முற்றுகையிடுங்கள்’ : விவசாயிகள் சங்கம் அழைப்பு

“நாங்கள் அனைத்து போராட்டக்களத்திலும் ஹோலி கொண்டாடினோம். சீக்கியர்களும் ஹோலா மொஹல்லா பண்டிகையைக் கொண்டாடினர். அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்களும் போராட்டக்களத்திற்கு வந்து பாரம்பரிய முறையில் ஹோலி விளையாடினர்.” என்று விவசாயிகள் சங்க தலைவர் அபிமன்யு கோஹர் கூறியுள்ளார்.

மூன்று விவசாய சட்டங்களை விரிவாக விளக்கும் வகையில் வழக்கறிஞர் ஜோகிந்தர் சிங் டூர் எழுதிய ‘இன் கனுனோ மீ காலா க்யா’ என்ற புத்தகமும் அப்போது வெளியிடப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்