ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முகங்கள் கொண்ட 10 தலை ராவணன் உருவ பொம்மையை விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவை சேர்ந்த விவசாயிகள் எரித்துள்ளனர்.
10 தலை உருவ பொம்மையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் ஆதானி ஆகியோர் முகங்கள் இடம்பெற்றிருந்தது.
மேலும், உருவ பொம்மையின் உடலில், “நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, நான் விவசாயிகளுக்கு எதிரானவன்” என ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது.
ஹத்ரோயில் உள்ள சுவாமி குமாரனந்த பவன் அருகே திரண்ட விவசாயிகள், வேளாண் சட்டங்கள் மற்றும் லக்கிம்பூர் வன்முறையைக் கண்டிக்கும் விதமாக பிரதமர் மோடி மற்றும் பலருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி, சஹீத் ஸ்மார்க் வரை பேரணியாக சென்றனர்.
”தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றது என விழாவின் நடமுறையின் படி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதமர் மோடி உள்ளிட்டவர்களின் உருவ பொம்மையை எரித்தோம். அனைத்து ஜனநாயக விழுமியங்களை மறந்து குறிப்பிட்ட சில தொழிலபதிர்களுக்கு உதவுவதற்காக, விவசாயிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது” என சம்யுக்த் கிசான் மோச்சர்சாவின் ராஜஸ்தான் மாநில இணைச் செயலாளர் சஞ்சய் மாதவ் தெரிவித்துள்ளார்.
உருவபொம்மை எரிப்பதற்கு நாடு தழுவிய அளவில் அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.