Aran Sei

‘விவசாயிகளே! பாஜகவிடம் எச்சரிக்கையாக இருங்கள்’ –அகிலேஷ் யாதவ்

பாஜகவிடம் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச தேர்தலையொட்டி கூட்டணியில் இருக்கு ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவரான ஜெயந்த் சவுத்ரிவுடன் அகிலேஷ் யாதவ் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வாக்குகளுக்காக மட்டுமே மூன்று வேளாண் சட்டங்களை ஆளும் ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. பாஜகவிடம் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உத்தரப்பிரதேசத்தில் தங்கள் கூட்டணியின் ஆட்சி அமைத்தால், விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் விவசாயிகளுக்கு உறுதியளித்தார்

“விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது, ஆனால் விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்களைக் கொண்டு வந்தது. விவசாயிகள் சட்டங்களை ரத்து செய்ய அரசாங்கத்தை வற்புறுத்தி போராடினர். பாஜக சட்டங்களைத் திரும்பப் பெற்றது.  முன்னறிவிப்பின்றி சட்டங்களைக் கொண்டுவரும் கட்சியாக பாஜக செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆட்சிக்கு வந்ததும், தங்கள் கட்சி இதுபோன்ற எந்த சட்டத்தையும் மாநிலத்தில் அமல்படுத்தாது என்று உறுதிபட அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இருவரும் விவசாயிகளின் மகன்கள், அவர்களின் உரிமைகளுக்காக கடைசி மூச்சு வரை போராடுவோம். குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயிர்களை கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை நிச்சயம் செய்வோம். கரும்பு நிலுவைத் தொகைக்காக விவசாயிகள் காத்திருக்காமல் இருக்க கார்பஸ் நிதி உருவாக்கப்படும்” என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்