Aran Sei

போராடும் விவசாயிகளுக்கு தேசிய புலனாய்வு முகமை நோட்டீஸ் அனுப்பவில்லை – மாநிலங்களவையில் மத்திய அரசு அறிவிப்பு

விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்குத் தேசிய புலனாய்வு முகமை நோட்டீஸ் அனுப்பவில்லையென மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிரித்து பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திரபிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் இரண்டு மாதங்களாகப் போராடி வருகின்றனர்.

திருநங்கை உரிமைக்காகப் போராடிய சமூக ஆர்வலர் ஸ்னேகா மரணம்: விசாரணையில் கேரள காவல்துறை

இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்குத் தேசிய புலனாய்வு முகமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதா எனக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக் விஜய் சிங் மற்றும் உறுப்பினர்கள் மாநிலங்களவை கேள்வி கேட்டிருந்தனர்.

நான் ஒரு பெருமை மிக்க ‘அந்தோலன் ஜீவி’ – பிரதமரின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி

இந்தக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, விவசாயிகளுக்குத் தேசிய புலனாய்வு முகமை சார்பாக எந்த நோட்டீஸும் வழங்கவில்லை என்றும், தீவிரவாத தொடர்பான குற்றங்களை மட்டுமே தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

 

Sources : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்